ராஜஸ்தானை மிரட்டும் பறவைக் காய்ச்சல் – கொத்து கொத்தாக இறக்கும் காக்கைகள்!
இந்தியாவின் இன்னும் கொரோனா வைரஸ் தாக்குதல் முழுமையாகக் கட்டுக்குள் வராமல் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைகளுக்கு மர்ம வைரஸ் மூலமாக காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பது அதிகமாகியுள்ளது. ஜெய்ப்பூர், ஜலாவர் உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென உயிரிழந்துள்ளன.இறந்த காக்கைகளின் உடலில் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் தீவிர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கோழிப் பண்ணை உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை