மட்டு மாவட்டத்தில் 52 ஆயிரம் வீடுகளும், 17 ஆயிரம் மலசல கூட வசதிகளும் தேவையாகவுள்ளது-இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்திலே சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்கள் இருக்கின்றது. அதிலே கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே 239,000 இற்கு மேற்பட்ட வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கு 38,000 வாக்குகள்தான் வழங்கப்பட்டது. இது 5 இல் ஒருபங்குகூட இல்லை. ஆனால் அவர் 14 இலட்டசம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அப்போதே அவர் தெரிவித்திருந்தார் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாயப்புக்களை வழங்குவதாக அது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கத்தை தமிழ் அரசில் தலைவர்கள் தாங்கிப்பிடித்துக் கொண்டு பாதுகாத்தார்கள். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. தற்போதைய பிரதமர் முன்னர் ஜானாதிபதியாக இருந்தபோது 2012 ஆம் ஆண்டு ஒரே நாளில் 57 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கியதற்குப் பின்னர் வந்த அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்றித்தான் வந்துள்ளது, அதன் பின்னர் தற்போது 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விடுபட்டுள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  ஒரு இலட்சம் கிராமிய வீதிகள் புணரமைக்கப்பட்டு வருகின்றன.  இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுமா? ஏன சிலர் கேள்வி எழுப்பினார்கலென கிராமிய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒருலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் தொணிப்பொருளுக்கமைய மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதூர் 08 ஆம் குறுக்கு  பிரதான  வீதியானது
ஒரு கிலோ மீற்றர் கொங்கிறீட் வீதியாக புணரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக பங்கேற்று குறித்த வீதியினை திறந்துவைத்தார்.
குறித்த நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வை.வாசுதேவன், மாவட்ட பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், பொறியியலாளர்கள் மற்றும் முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள்,  பொதுமக்களென கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் முறையான வீதிக்கட்டமைப்பு, வடிகான் அமைப்பு வசதி, குளங்களின் புணரமைப்பு என்பன இல்லை. விழுகின்ற மழை நீர் வீணாக கடலைச் சென்றடைகின்றது. “வானத்தலிருந்து விழுகின்ற ஒரு துளி நீரைக்கூட மனிதர்க்குப் பயன்படாமல் வீணாக கடலைச் சென்றடைய விடமாட்டேன் என பராக்கிரமபாகு மன்னன் அப்போது தெரிவித்திருந்தார்” அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 இற்கு மேற்பட்ட குளங்கள் புணரமைக்கப்படாமல் உள்ளன. பராகிரமபாகு மன்னன் கூறியதுபோன்று வானித்திலிருந்து விழுகின்ற மழை நீரை மாவட்டத்திலிருக்கின்ற குளங்களில் சேமித்தால் இம்மாவட்டத்தில் செல்வம் கொழிக்கும்.
அனைத்து வழங்களும் கொட்டிக்கிடக்கின்ற நமது மாவட்டத்தில் சரியான முறையில் அபிவிருத்தி செய்யப்படவிலலை. இதனால்தான் பொருளாதார ரீதியாக நாம் பின்னடைவில் இருக்கின்றோம். தற்போது மழை வெள்ளத்தினால் முறையான வீதிக்கட்டமைப்பு இன்மையினால் கிரான் பிரதேசத்திலே சுமார் 7 இற்கு மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. முறையான பாலங்கள் அமைப்படாததனால் சுமார் 40 சிறு கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டள்ளது. வாகரை கட்டுமுறிவு கிராமத்தைச்சேர்ந்த 4 வயது குழந்தை ஒன்று அண்மையில் பாம்பு தீண்டி இறந்தது. முறையான வீதிக்கட்டமைப்பு இருந்திருந்தால் அந்தக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். அந்த வீதிக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்காததினால் அக்குழந்தையின் இழப்குப்புக்கு நானும் ஓர் காணம் என நான் தெரிவித்திருந்தேன்.
3 லட்சத்திற்கு அதிகமாகவுள்ள தமிழ் வாக்களர்களைக் கொண்ட இந்த மட்டக்களப்பு மவாட்டத்தில் எமக்கு வழங்கப்பட்டது 33,000 வாக்குகள்தான். இவர்கள் வாக்களித்திருக்காவிட்டால் இந்த மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் உருவாகியிருக்க முடியாது, இவ்வாறான அபிவிருத்திகளைக் எமது மாவட்டம் கண்டிருக்க முடியாதிருந்திருக்கும். கடந்த ஐக்கிய தேசிக் கட்சி அரசாங்கம்  இருந்த காலத்தில் 65 ஆயிரம் வீடுகள் வந்தன ஒரு வீட்டின் பெறுமதி 1,250,000 ரூபாவாகும். அதிலே 6 வீட்டைக்கூட அவர்கள் கட்டவில்லை. ஆனால் எமது மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 52 ஆயிரம் வீடுகளும், 17 ஆயிரம் மலசல கூட வசதிகளும் தேவையாகவுள்ளது. எனவே அடிப்படை வசதிகளற்ற நிலையில் எமது சமூகம் தற்போது நின்று கொண்டிருக்கின்றது.
இவ்வாறான நிலமையில் எமது மக்களின் பிரச்சனைகளையும், கண்ணீரையும் வைத்துக் கொண்டு நாம் தொடற்சியாக அரசியல் செய்ய முடியாது. சகோதர முஸ்லிம் சமூகத்தினர் கடந்த காலத்தில் அபிவிருத்திக்காகப்போராடி எந்தவித உரிமைகளையும் இழக்கவில்லை. நாங்கள் தற்போது அபிவிருத்தியும் இல்லை, உரிமையும் இல்லை என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கடந்த 7 தசாப்தகாலமாக இதனையே செல்லிச் சொல்லி காலத்தைக் கடத்தி வருகின்றோம். எமது சமூகத்தை கல்வி, பொருளாதாரம், கலை, கலாசார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டும். அப்போதுதான் நமது மாவட்டம் அபிவிருத்தியிலும் முன்னேற்றமடையும். ஏற்கனவே 450 வீடுகளைக் கட்டியுள்ளோம், தற்போது, இந்த நிலையில்தான் எனது அமைச்சினூடாக தற்போது 3200 மலசல கூடங்களையும், 128,000 ரூபா பெறுமதியான 97 வீடுகளையும் கொண்டு வந்திருக்கின்றோம்.
எனவே மக்கள் நலனோம்பு செயற்றிட்டங்களைக் கொண்டுவந்து இளைஞர் யுவதிகளுக்கு அரச துறைகளில் வேலைவாய்ப்புக்களை வழங்கி அபிவிருத்திகாணச் செய்ய வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.