கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 20 பேர் சிகிச்சைகள் முடித்து வெளியேறினர்

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 20 பேர் சிகிச்சைகள் முடித்து இன்று வெளியேறினர். இன்று காலை 8.30 மணிவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் 19 சிகிச்சை நிலையத்திலிலுந்து சிகிச்சை முடிவடைந்த நிலையில் இன்று 20 பேர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இன்று காலை 8.30 மணிவரை 28 புதிய நோயாளர்கள் குறிதத் சிகிச்சை நிலையத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், அவர்களிற்களில் 28 பேரும் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுடன் மொத்தமாக 77 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 22 ஆண்களும், 55 பெண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.