ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் புளிய மரம்!

புளிய மரம், மனிதருக்கு நிழல்கள் மட்டும் தருவதில்லை, உணவில் சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும், சேர்க்கப்படும் ஒரு முக்கிய உணவு பொருளாகவும் திகழ்கிறது. 

புளிய மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், பழத்தின் கொட்டைகள், பட்டைகள் அதன் பிசின்கள் என அனைத்தும் பலன் தரக்கூடியவை.

கர்ப்ப காலத்தில் பெண்கள் மலச்சிக்கல் தொல்லையால் பாதிக்கப்படுவர். அதற்கும் புளி ஒரு மலமிளக்கியாக அமையும். குமட்டலை தடுக்க புளிச்சாற்றை  சுவைக்கலாம்.
புளியம்பூ, புளியம்பிஞ்சு இரண்டையும் தேவையான அளவு எடுத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து இடித்து காய வைக்க வேண்டும். இதை ஊறுகாய் போன்று சாப்பாட்டோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணிவதோடு நல்ல பசியும் உண்டாகும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் பெரும்பாலும் காலை நேர மசக்கையால் அவதிப்படுவர். காலையில் எழுந்ததும் வாந்தி, குமட்டல், அதிகப் பசி போன்றவை இருக்கும். எதையாவது சாப்பிட்டால் உடனே வாந்தி வரும். இதை நிறுத்த புளியை நம் முன்னோர்கள் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
உடம்பு உஷ்ணமாகி வயிற்று வலியால் துடிப்பவர்கள் புளியை தண்ணீரில் ஊறவைத்து பின் நன்றாக கரைத்து, அதோடு பனைவெல்லம் சேர்த்துக் குடிக்க கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
புளி உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு ஆகியவற்றை குறைக்கிறது. நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். இருதயத்தில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைப்பதில் புளி மிக  வேகமாக செயலாற்றும்.
கை, கால், இடுப்பு என்று உடம்பில் ஏதாவது ஓரிடத்தில் அடிபட்டு வீங்கினாலோ, சுளுக்கு, பிடிப்பு ஏற்பட்டாலோ புளியை நன்றாக கரைத்து, உப்பு சேர்த்து கொதிக்கவைத்து கூழ்பதத்துக்கு தயாரித்து, அடிபட்ட இடத்தில் இந்தக் கூழை அளவான சூட்டில் பத்து போட்டால் வலி குறைந்து வீக்கமும், சுளுக்கும் உடனே சரியாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.