கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பாதுகாப்பு சுவரின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்தது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பாதுகாப்பு சுவரின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளது.

கண்டியில் பெய்த கடும் மழையுடனான வானிலையை அடுத்தே, இந்த சுவர் இடிந்துள்ளது.

தலதா மாளிகையின் ஸ்ரீ விஷ்ணு தேவஸ்தானத்திற்கு அருகிலுள்ள சுமார் 10 மீற்றர் நீளமான சுவரொன்றே உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இடத்திலுள்ள மற்றுமொரு பாதுகாப்பு சுவர் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் திலங்க தேலவிடம் வினவப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பொறுப்பு கூற வேண்டிய தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சுவரை விரைவில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தான் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.