அடையாள அழிப்பு இன அழிப்பின் நீட்சி-ரவிகரன் கடும் கண்டனம்
தமிழருக்கெதிரான நெடுங்கால இன அழிப்புகளின் உச்சக்கட்டமாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனிதப் பேரிழிவாக பன்னாடுகள் பார்த்துக் கொண்டிருக்க, முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு நிகழ்த்தப்பட்டது.
அழிக்கப்பட்ட இனத்தின் நினைவாக எழுந்த அடையாளம் ஒன்று இன்று அழிக்கப்பட்டிருக்கிறது.
அடையாள அழிப்பு இன அழிப்பின் நீட்சி ஆகும்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பு இன அழிப்பின் தொடர்ச்சியாகும்.
அடக்குமுறைகளால் எம்மை முடக்கி விடலாம் என்ற எண்ணம் வீழ்ந்து போகும் காலம் தொலைவிலில்லை.
அன்று இங்கு தவறிழைத்துவிட்டோம் என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பது மட்டும் ஈழத்தமிழர்களை ஆற்றாது.
இனியும் பொறுத்திருந்தால் வரலாறு ஒருபோதும் உங்களைப் போற்றாது. தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்கவும், தொடர்ந்து குற்றங்கள் இழைக்கப்படாமலிருக்கவும் பன்னாடுகள் உடனடியாகத் தலையிடவேண்டும் – என்றார்.
கருத்துக்களேதுமில்லை