கடல் உணவுகள் ஏற்றுமதி மத்தள விமான நிலையமூடாக ஆரம்பம்

மீன், இறால் போன்ற கடல் உணவுகள் நேற்று மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்கைஅப் எயார்லைன்ஸ் பி.கியூ-555 என்ற விமானம் மூலம் 658.5 கிலோகிராம் மீன் உட்பட கடல் உணவுகளை உக்ரேனுக்கு எடுத்துச் சென்றது.

இலங்கை ஒரு தரமான மீன் உட்பட கடல் உணவு ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம்(எம்.ஆர்.ஐ.ஏ.) கடல் உணவுகளை எதிர்காலத்தில் அதிகளவில் கையாளத் தயாராக இருப்பதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.