ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் போராட்டம்..!
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், கொரோனா பரவல் மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தம்மால் அரசியலுக்கு வர இயலாது; அரசியல் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் திடீரென அறிவித்தார். இதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதன்பின்னர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் )என்பதற்காக பல நூதன போராட்டங்களை ரசிகர்கள் நடத்தினர். இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் திரண்டு இன்று(10) காலை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் (Chennai’s Valluvar Kottam) அருகே ஜனவரி 10 ஆம் தேதி (இன்று) அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை அரசியலுக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும், மாநில தலைமையும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளில், ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி யாரும் போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரஜினி ரசிகர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை