ஹர்த்தாலுக்கு யாழில் மக்கள் பூரண ஆதரவு
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்திற்கும் யாழ்ப்பாண மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.தனியார் போக்குவரத்து சேவை இடம்பெறவில்லை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை