முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு விவகாரம்- மட்டக்களப்பில் ஹர்த்தால் அனுஸ்டிப்பு !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை இடித்து அகற்றியமையைக் கண்டித்து இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றுள்ள போதிலும் மாணவர்கள் வரவு மிக குறைவாக காணப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு, காத்தான்குடி, வாழைச்சேனை, கொக்கட்டிச்சோலை, உட்பட பல நகரங்களிலும் கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பித்துள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.