சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்
யாழ் மாவடத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் நேற்று (12) சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், சாவகச்சேரி பிரதேச செயல ர், பாராளுமன்ற உறுப்பினர்களான சி .சிறிதரன் மற்றும் செ .கஜேந்திரன் , சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர், மற்றும் நகரசபை தவிசாளர் ,உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர் , திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டோர் என பல தரப்பினரின் பங்கேற்புடன் சாவகச்சேரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் Covid – 19 சுகாதார நடமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது.
இந்த கூட்டத்தொடரில் தென்மராட்சிப் பிரதேச வீதி அபிவிருத்தி, குடிநீர் பிரச்சனை, கால்நடை வளர்ப்பு தொடர்பாக, சமூக உட்கட்டமைப்பு தொடர்பாக, கல்வி,சுகாதாரம், விவசாயம் தொடர்பாக என பல்வேறு விடயங்கள் சம்மந்தமாகவும் பல துறைகள் சம்மந்தமாகவும் கள்ளமண் ஏற்றல் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக மக்கள் பிரதிநிதிகள் காவல் துறையினர் மீது குற்றம் சாட்டியிருந்தனர் அந்த விடயம் தொடர்பாக உரிய தரப்பினருக்கு நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதனால் பணிப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
கருத்துக்களேதுமில்லை