Google map க்கு போட்டியாக intents GO – சாலையில் உள்ள குழிகளை கூட சொல்கிறது!

வீதியில் எங்கெங்கு குழிகள், ஸ்பீட் பிரேக்கர்கள் உள்ளன என்பதை கூட சொல்லும் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பெரும்பாலும் கூகுள் மேப் பயன்படுத்துகிறோம். இதன்மூலம் குறிப்பிட்ட இடத்தை அடைய எந்த வழியில் சென்றால் விரைவில் செல்லலாம் என்பதை அறியலாம். ஆனால் சில சமயம் நாம் திருமண மண்டபத்திற்கு வழி கேட்டால் கூகுள் மேப் சுடுகாட்டிற்கு வழிகாட்டி விடுகிறது.

இந்நிலையில் ரோடுகளின் தன்மை, அதற்கு தீர்வு காணும் வண்ணம் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குருகிராமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Intents Mobi நிறுவனம் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் நாம் செல்லும் பாதைகளில் உள்ள குழிகள், வேகத்தடைகள், கழிப்பறைகள், போக்குவரத்து நிலை, உணவகங்கள் ஆகியவற்றை அறியலாம்.

இது பயனர்களின் தனிப்பட்ட தரவை சேகரிக்காது என்பதால் அனைவரும் இதனை தயக்கமின்றி பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.