அலங்காநல்லூர் ‘ஜல்லிக்கட்டு’.. 12 காளைகளை அடக்கி ‘முதல் பரிசை’ தட்டிச்சென்ற கண்ணன் .!
உலக புகழ்பெற்ற பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி கண்ணன் என்பவர் முதல் பரிசை தட்டுச்சென்றார்.
பொங்கல் பண்டிகையின் 3-வது நாளான இன்று உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.30 மணிக்கு தொடங்கியது. கோட்டை முனியசாமி வாடிவாசலில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
8 சுற்றுகளாக நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 வீரர்களும், 720-க்கும் மேற்பட்ட காளைகளும் களமிறக்கப்பட்டன. வெற்றிபெற்ற காளை மற்றும் காளையர்களுக்கு கார், தங்க நாணயம், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் அதிகபட்சமாக 12 காளைகளை அடக்கிய விராட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கண்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சார்பில் முதல் பரிசாக கார் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 9 காளைகளை அடக்கி 2வது இடத்தை பிடித்த அரிட்டாபட்டியைச் சேர்ந்த கருப்பணனுக்கு மோட்டார் சைக்கிளும், 8 காளைகளை அடக்கிய சக்திக்கு ஒரு சவரன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. சிறந்த மாட்டிற்கான பரிசு குருவித்துறையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை