கடற்கரையில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய நண்பர்கள்… போதை உச்சத்தில் கண்களை நோண்டிய கொடூரம்!
சென்னை மெரினா கடற்கரையில் நண்பர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம் முற்றி ஒருவர் மற்றவரின் கண்களை நோண்டும் அளவுக்கு சென்றுள்ளது.
அசோக சக்கரவர்த்தி – பெரிய பாண்டியன் ஆகிய நண்பர்கள் இருவரும் சென்னை மெரினா கடற்கரையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட அசோக் பெரியபாண்டியனின் தாயைப் பற்றி தவறாக பேசியுள்ளார். இதனால் கோபமான பெரிய பாண்டி, அசோக சக்கரவர்த்தியின் 2 கண்களையும் பெரிய பாண்டியன் நோண்டி எடுத்துவிட்டார்.
இதையடுத்து பெரிய பாண்டியன் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய அசோக்கைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் பெரிய பாண்டி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை