வேலை செய்து கொண்டு 1,687 km சைக்கிள் பயணம்… கனவை நிஜமாக்கிய இளைஞர்கள்!!
.
கொரோனா நேரத்தில் லேப் டாப்பைக் கட்டிக் கொண்டு வீட்டிற்குள்ளே முடங்கிப்போன கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் உற்சாகமான வாழ்க்கையை 3 இளைஞர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கின்றனர். அதுவும் தங்களுடைய அலுவலக வேலையை பார்த்துக் கொண்டே ஜாலியாக சைக்கிளில் ஊர்ச் சுற்றி இருக்கின்றனர். இதற்காக எந்த மெனக்கெடலும் இல்லாமல் தங்களுடைய வாழ்நாள் கனவை நிறைவேற்றி கொண்டு உள்ளனர்.
பாக்கன் ஜார்ஜ், ஆல்வின் ஜோசப், ரதீஷ் பலோபவ் இந்த 3 இளைஞர்களும் மும்பையில்
இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்புசைக்கிளில் பயணம் செய்ய ஆரம்பித்து உள்ளனர்.
மேலும் தங்களுடைய பயணத்தைக் குறித்து கம்பெனி நிர்வாகத்திடமும்
கூறியதோடு வேலை நேரத்தில் வேலை, மற்ற நேரத்தில் சைக்கிள் பயணம் என்ற
டீலிங்கோடுபயணத்தைத் தொடங்கி கிட்டத்தட்ட 1,687 கி.மீ பயணத்தை
சமீபத்தில் முடித்து உள்ளனர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் இருந்து கிளம்பிய இந்த 3 பேரும் வழியில் பூனே, சதாரா, கோலாப்பூர், பெல்காம், ஹுபலி, டேவனசேரே, பெங்களூரு, சேலம், மதுரை, திருநெல்வேலி எனப் பல ஊர்களுக்கும் சென்று உள்ளனர். இவர்கள் மற்ற சுற்றுலா பயணிகளைப் போல இல்லாமல்
ஒவ்வொரு ஊரின் உணவையும் அந்த ஊர் மக்களின் அன்பு, வாழ்க்கை முறை,
வழிப் பயணம் எனத் தனி ரசனையான நிகழ்வுகளோடு தங்களுடைய பயணத்தைத் தொடர்ந்ததுதான் மற்றவர்களையும் ரசிக்க வைத்து இருக்கிறது.
கொரோனா நேரத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் விரக்தியோடு
வாழ்க்கையை நடத்தி வரும்போது இவர்கள் ஒரு உற்சாகமாக பயணத்தை மேற்கொண்டு இருப்பது பலருக்கும்
ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுடைய பயண அனுபவத்தை தெரிவித்த இவர்கள் கொரோனா
கட்டுப்பாடு மற்றும் சில ஹோட்டல்களில் அனுமதிக்காதது தவிர வேறு எந்த கஷ்டத்தையும் பார்க்கவில்லை
என்றே கூறி இருக்கின்றனர்.
மேலும் இந்த சைக்கிள் பயணம் ஒரு தியானத்திற்கு ஈடாக இருந்தது என்றும் வாழ்க்கையில் இப்படி ஒரு தருணத்திற்காக
காத்திருந்ததாகவும் அந்த இளைஞர்கள் கூறியது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
மற்ற நேரங்களில் வேலை,பொருளாதாரம் எனப் பல இடையூறுகளுக்காகத் தள்ளிப்போன
இந்த இன்பச் சுற்றுலா,கொரோனா புண்ணியத்தில் நிறைவேறியதாகவும் அந்த இளைஞர்கள்
கூறி உள்ளனர்.
இந்த சைக்கிள் பயணத்திற்காக ஒவ்வொரு இளைஞரும் தலா ரூ.25 ஆயிரத்தை செலவிட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.
அதுவும் தங்களுடைய
அலுவல் வேலைகளுக்காக ஹோட்டல்களில் தங்க வேண்டியே
இந்தப் பணம் செலவானதாக
அந்த இளைஞர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் ஒருவருக்கொருவர் செலவு செய்வது, மற்றவர்களை
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நேசிப்பது, அன்பு பாராட்டுவது போன்ற
விஷயங்களையும் இந்த பயணத்தில் கற்றுக் கொண்டதாகத் தெரிவித்து உள்ளனர்
கருத்துக்களேதுமில்லை