சாய்ந்தமருது மேவரிக்ஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு
(எம்.என்.எம்.அப்ராஸ் )
சாய்ந்தமருது மேவரிக்ஸ்(MAVERICKS SPORTS CLUB) விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு கழகத்தின் தலைவர் எம்.எஸ். இர்சாத் தலைமையில் இறக்காமத்தில் நேற்று(24)இடம்பெற்றது.
புதிய சீருடை அறிமுக நிகழ்வில் பிரதம அதிதியாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு வன வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்கவின் இணைப்பாளர் எம்.வை.எம்.நிப்ராஸ் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு புதிய சீருடைகளை வழங்கி வைத்தார்.
சீருடை அறிமுக நிகழ்வில் கழகத்தின் அணித்தலைவர் எம்.எம்.எம்.பைனுஸ் ,செயலாளர் எஸ்.எம்.இஸ்ஹாக் ,பொருளாலர் எம்.எம்.எம்.பர்லிஸ் மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இதன் போது கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை