இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்திலும் போராட்டமொன்று இன்று (26) முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘இந்திய மத்திய அரசே உணவளிக்கும் உழவனின் உயிரோடு விளையாடாதே உலகமே எதிர்த்து நிற்கும் இனி உன்னை’, ‘விவசாய உற்பத்திகளை விவசாயிகளே தீர்மானிக்க வேண்டும் காப்ரேட் நிறுவனங்கள் அல்ல. இந்திய மத்திய அரசே முடிவு செய்’, என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்பு சார்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.