கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு !
(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் தர்ஹாஷரீபின்199வது வருட கொடியேற்று விழா கொடியிறக்கத்துடன் நிறைவு நேற்று (26) பிற்பகல் நிறைவு பெற்றது.
கொடியிறக்கும் தினமான இன்று விஷேட துஆ பிராத்தனையுடன் மினாரக்களில் ஏற்றப்பட்ட கொடிகள் இறக்கி வைக்கப்பட்டது.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் கடந்த (14) வியாழன் கொடியேற்றம் ஆரம்பமாகிகடந்த 12 தினங்களாக இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது மெளலித் ஷரீப் பாராயணம், மற்றும் துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன் குறிப்பாக நாட்டில் கொரானா தொற்றில் இருந்து முழுமையாக விடுபட வேண்டி விசேட துஆ பிராத்தனை இடம்பெற்றது.
இதன் போது உலமாக்கள், அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ்,சுகாதார பிரிவினர் , பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கொரோனா தொற்று காரணமாக இம் முறை கொடியேற்றமானது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை