சிறுவர் நேய மாநகர கட்டமைப்பின் நகரை அழகுபடுத்தும் பணியில் மட்டக்களப்பு மாநகர சபை

சிறுவர் நேய மாநகர கட்டமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் கல்லடி கடற்கரை மற்றும் கோட்டை பூங்கா என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன.

தெற்காசியாவிலேயே முதல் முறையாக மட்டக்களப்பு மாநகரம் சிறுவர் சிநேக மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.  இதற்கான உடன்படிக்கையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டிம் சுட்டான் ஆகியோர் கடந்த ஆண்டில் கைச்சாத்திட்டிருந்தனர்.

இதன்படி நகர அழகுபடுத்தல் செயற்பாடுகளும், சிறுவர்களின் ஆற்றல் மற்றும் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலான கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் பூங்காக்களையும் மாற்றியமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக லொயிட்ஸ்அவனியு பூங்காவில் சிறுவர்களுக்கான சாகச பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு வருவதோடு, கோட்டை பூங்கா மற்றும் கல்லடி கடற்கரை எனபன அழகுபடுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக நடமாடக் கூடிய வகையில் ஒளியூட்டப்பட்டும் வருகின்றன.

இப்பணிகளை இன்று (27) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மற்றும் மாநகர சபையின் உறுப்பினர் த.இராஜேந்திரன் ஆகியோர்  பார்வையிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.