நாடு முழுவதும் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா மேலும் கூறினார்.

வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்இ அதிக வேகமாக வாகனங்களைச் செலுத்துவோர்இ குடிபோதையில் வாகனங்களைச் செலுத்துவோர் போன்றவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கொவிட் சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் ஆசனங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.