பொம்மையை மனைவியாக்கிய இளைஞன் ; காரணம் என்ன தெரியுமா?
ஹாங்காங்கை (Hong Kong) சேர்ந்த 36 வயதான இளைஞர் ஒருவர், செக்ஸ் பொம்மை ஒன்றை தனது வருங்கால மனைவியாக தேர்வு செய்துள்ளார்..!
ஹாங்காங்கை சேர்ந்தவர் ஸீ தியான்ராங் (வயது 36), தனது வருங்கால மனைவியாக (fiancee) செக்ஸ் பொம்மை ஒன்றை தேர்வு செய்துள்ளார். தற்போது பெற்றோருடன் தங்கியிருக்கும் அவர், பெண்களை விட, அந்த பொம்மை எளிதாக டேட் செய்ய வசதியாக இருக்கிறது என்கிறார். மோச்சி என்ற அந்த செக்ஸ் பொம்மைக்கு, iphone 12 உள்ளிட்ட விலை உயர்ந்த பல பரிசுகளை வழங்கி உள்ளாராம்.
20 செட் விலை உயர்ந்த ஆடைகளை தனது வருங்கால மனைவிக்காக வாங்கியுள்ள ஸீ, 10 ஜோடி செருப்புகளையும் வாங்கி கொடுத்துள்ளார். மோச்சியிடம் இதுவரை எல்லை மீறியது இல்லை எனவும், அதன் மென்மையான சருமத்திற்கு பாதிப்பு இல்லாமல் முத்தம் மட்டும் தந்தாகவும் ஸீ கூறியுள்ளார். செக்ஸ் பொம்மையுடன் இதுவரை அவர் உடலுறவு மேற்கொண்டது இல்லையாம்.
இது குறித்து அவர் கூறுகையில்., ‘‘இதற்கு முன்பு நான் கேர்ள் பிரண்டுகளை வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு பொம்மை மீது மட்டுமே விருப்பம் வருகிறது. நான் அதனுடன் உடலுறவு வைத்து கொண்டது இல்லை. அவளை மிகவும் மதிக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹாங்காங்கில் உள்ள ஒரு கடையில் முதன் முதலில் செக்ஸ் பொம்மையை கண்டு அதனால் ஈர்க்கப்பட்டேன்.
அப்போது அதன் விலை 80 ஆயிரம் யுவான் (இந்திய மதிப்பில் 9 லட்சம் ரூபாய்க்கும் மேல்) ஆக இருந்தது. 2019 ஆம் ஆண்டு அதன் விலை 10 ஆயிரம் யுவானாக அதாவது இந்திய மதிப்பில் 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த போது, இந்த பொம்மையை வாங்கியிருக்கிறேன். என் காதலியை கவனித்து கொள்வதில் அதிக நேரம் செலவு செய்கிறேன்’’ என்றார்.
இதுபோல் நடப்பது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. கடந்த நவம்பரில், கஜகஸ்தானைச் சேர்ந்த ஒரு பாடிபில்டர் தனது செக்ஸ் பொம்மையை, எட்டு மாதங்கள் டேட்டிங் செய்து பின் திருமணம் செய்து கொண்டார் எனபது குறிப்பிடதக்கது.
கருத்துக்களேதுமில்லை