மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – டச்பார் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பங்குத்தந்தை அருட்பணி சுவைக்கீன் ரொசான் அடிகளார் தலைமையில் மிக விமர்சையாக ஆரம்பமானது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் இரண்டு நவ நாட்கால வழிபாடுகள் கொவிட் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்றதுடன், (30) சனிக்கிழமை மாலை புனிதரின் திருச்சொரூப பவனியும் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று (31) ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டு திருப்பலியானது அருட்தந்தை யூட் டிலக்சன் அடிகளார் தலைமையில்
ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியில் பங்குத்தந்தை சு.ரொசான் அடிகளார், அருட்தந்தையர்களான மரியதாஸ், லோரன்ஸ், டிலிமா, கிரைட்டன், ஜோன் ஜோசப் மேரி அடிகளார் மற்றும் அருட்சகோதரர் டினோஜன்,
அருட்சகேதரிகள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பெருமளவிலான அந்தோனியார் பக்தர்கள் சுகாதார முறைப்படி கலந்து கொண்டு புனிதரின் ஆசீரை பெற்றுக் கொள்ள வருகை தந்திருந்ததுடன் திருவிழா திருப்பலி 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு விசேட திருச்சுருப ஆசிர்வாதத்துடன் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது.
கருத்துக்களேதுமில்லை