சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்; மக்கள் காங்கிரஸ்முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுடன் சந்திப்பு!

நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில்,  இன்று (01) சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம், கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதற்காகவும், விசேடமாக முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் எதிர்ப்பினை வெளியிட்டமைக்கும், அவ்வமைப்புக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

அத்துடன், சிறுபான்மை சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள காணிப் பிரச்சினை, இராணுவமயமாக்கல் போன்ற இன்னோரன்ன பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினர்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், சிரேஷ்ட பிரதித் தலைவர் சஹீட் மற்றும் பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.