சவளக்கடை சமுர்த்தி வங்கியின் சகல கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளும் கணனி மயப்படுத்தப்பட்டது!

(பாறுக் ஷிஹான்)

இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து சமூர்த்தி வங்கிகளையும் கணனி மயப்படுத்தி பொதுமக்களுக்கு துரித சேவையை வழங்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் இன்று(01)நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சவளக்கடை சமுர்த்தி வங்கியின் சகல கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளும் கணனி மயப்படுத்தப்பட்டு தற்போது பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த சமுர்த்தி வங்கியில் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடைய வங்கி கணக்குகள் நடைமுறையில் உள்ளதோடு சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களின் வங்கி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த வங்கி கணக்குகள் அனைத்தும் தற்போது கணனி மயப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் கலந்து கொண்டு கணனி மயப்படுத்தல் செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தார்.மேலும் இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் யு.எல் ஜவாஹீர் , சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம் ,சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.ஏ அலீம் ,சவளக்கடை சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.ஜினேந்திரன் ,உதவி முகாமையாளர் ஏ.எம்.எம். நபார், புத்தக காப்பாளர் ஏ.எம்.றிஸ்மினா உட்பட சமுர்த்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.