க.பொ.த. சாதாரணதர செய்முறை பரீட்சையை இடைநிறுத்த முடிவு

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர செய்முறை பரீட்சையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய பின்னர், பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புள்ளிகளை பெற்று அதன் அடிப்படையில் முடிவுகளை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தரம் 10 இல் மூன்று தவணையிலும் 11 ஆம் வகுப்பில் இரு தவணைகளிலும் பெறப்பட்ட மதிப்பெண்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும் என அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும், கல்வி வலையத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளதாக கூறினார்.

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை அடுத்த மாதம் 1 முதல் 11 வரை நடத்த கல்வி அமைச்சு  தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.