உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவிப்பு!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பலர் காணாமல் போயுள்ளனர். பலர் வீடுகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் விரைந்துள்ள பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இயற்கை பேரிடர் சம்பவம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய மக்களுக்கு உதவ இங்கிலாந்து தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.