உலகின் முதல் வெற்றிகரமான முகம் மற்றும் கைகள் மாற்று அறுவை சிகிச்சை!
உலகின் முதல் வெற்றிகரமான முகம் மற்றும் இரு கைகள் மாற்று அறுவை சிகிச்சையை செய்து அமெரிக்க வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
22 வயதான ஜோ டிமியோ (Joe DiMeo, ) என்பவருக்கே குறித்த அறுவைச் சிகி்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த 2018 ஆம் ஆண்டு கார் விபத்தொன்றில் சிக்கினார். இதனால் அவரது உடலில் 80% க்கும் மேலான பகுதி தீக்காயங்களினால் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக உதடுகள் மற்றும் கண் இமைகளை அவர் இழந்ததோடு அவரது விரல் நுனிகளும் வெட்டப்பட்டன.
இந் நிலையில் அவரது நிலையை அறிந்த , நியூயோர்க்கிலுள்ள NYU லாங்கோன் (NYU Langone) என்ற வைத்தியசாலையொன்று 2019 ஆம் ஆண்டு
அவருக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது.
இதனையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் அவருக்கு இரு கைகள் மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இச் சிகிச்சையின் மூலம் உலகின் முதல் வெற்றிகரமான முகம் மற்றும் இரு கைகள் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட நபர் என்ற சாதனை ஜோ டிமியோ படைத்துள்ளார்.
மேலும் இவ் அறுவை சிகிச்சையானது ”தனது வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பினை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை