ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் யாழ்.இளைஞன்!
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.
இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது.
19 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் கடந்த ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்களின் விபரங்கள்..
- குசல் பெரேரா
- திஸர பெரேரா
- கெவின் கொத்திகொட
- மஹேஷ் தீக்சன
- விஜயகாந்த் வியஸ்காந்த்
- துஷ்மந்த சமீர
- வனிந்து ஹசரங்க
- தசுன் ஷானக
- இசுறு உதான
கருத்துக்களேதுமில்லை