ஐ .பி .ல் ஏலம் 2021: ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், மேக்ஸ்வெல் ஆகியோர் மிக உயர்ந்த விலை பிரிவில்…

2021-ம் ஆண்டு நடக்க உள்ள ஐபில் போட்டிகளுக்கனான ஏலம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. மாலை 3- மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்த ஏலத்தில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ், ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் (ரூ .2 கோடி) மிக உயர்ந்த அடிப்படை விலை பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இந்த ஏலத்திற்காக 1114 வீரர்கள் பதிவு செய்து இருந்த நிலையில் 292 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்பார்கள் என ஐபில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இணை நாடுகளைச் சேர்ந்த மூன்று வீரர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 292 வீரர்களில் வெறும் 61 வீரர்கள் மட்டுமே 8 அணிகளுக்காக தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் அணியில் 13 இடங்கள் உள்ளன. அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் அணியில் வெறும் மூன்று காலியிடங்கள் மட்டுமே உள்ளனகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிக கையிருப்பு வைத்துள்ளது (ரூ .53.1 கோடி). ஆனால் சன்ரைசர்ஸ் 11 கோடிக்கு (10.75 கோடி) குறைவாகவே செலவிட முடியும் என்ற நிலையில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, அந்த அணிக்கு இந்த ஏலம் ஒரு சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாக இருக்கும். ஏனென்றால் அந்த அணியில் உள்ள 7 இடங்களை நிரப்பு வெறும் 22.7 கோடி ரூபாயை மட்டுமே கையில் வைத்துள்ளது. அந்த அணி ஹர்பஜன் சிங் மற்றும் கேதார் ஜாதவை இந்த ஆண்டு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனும் குறைந்த அடிப்படை விலை பிரிவில் (ரூ .20 லட்சம்) சேர்க்கப்பட்டுள்ளார்.
மேக்ஸ்வெல் மற்றும் ஸ்மித் தவிர, ஷாகிப்-அல்-ஹசன், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட், ஜேசன் ராய் மற்றும் மார்க் வூட் போன்றோரும் அதிக அடிப்படை விலை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடிப்படை விலை ரூ .1.5 கோடி பட்டியலில் 12 வீரர்கள் உள்ளனர். இந்திய பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் போன்றோர் ரூ .1 கோடி அடிப்படை விலை பட்டியலில் உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.