ஆயிரம் அடி உயரத்தில் இரு பெரும் பாறைகள் இடையே கயிற்றைக் கட்டி நடந்து இளைஞர் சாதனை..!
ஆஸ்திரேலியாவில் உள்ள மிக உயர்ந்த இரு பாறைகளுக்கு நடுவே கயிற்றினைக் கட்டி அதன்மீது நடந்து ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ராயன் ராபின்சன் என்பவர் உயரமான இடங்களுக்கு நடுவே கயிற்றைக் கட்டி அதன் மீது நடந்து செல்வது வழக்கம். அதற்காக ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவுக்கு வந்த ராபின்சன் அங்குள்ள கேப் பில்லர் என்ற இரு பெரும் பாறைகளுக்கு நடுவே கயிற்றைக் கட்டி நடந்தார்.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் அடி உயரத்தில் நடந்து சென்ற அவர், ஆட்டம் காண வைத்த ஊழிக் காற்று, கொந்தளித்த கடல் ஆகியவற்றின் நடுவே கயிற்றில் நடந்து சாதனை படைத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை