மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாட்டில் தாய்த் தமிழ் மொழி தின விழா
மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கக் அமைப்பின் ஏற்பாட்டில் தாய்மொழி தினத்தை சிறப்பிக்கும் முகமாக தமிழ்மொழி விழா நேற்று(21) மாலை செங்கலடி செல்லம் பிறிமியர் திரையரங்கில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரசியலாளர்கள், கல்வியியலாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், சமூக மட்ட பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.
தாய்மொழி தினத்தை சிறப்பிக்கும் முகமாக தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்து கட்சி பேதங்களற்ற முறையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் கலாச்சார முறைப்படி அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன், தமிழின் தொண்மை, பெருமை தொடர்பில் சான்றோரால் விவரிக்கப்பட்டன. அத்துடன், மாவட்டத்தின் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் என தெரிவு செய்யப்பட்ட 25க்கும் மேற்பட்ட புலமைமிக்கோர் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
கருத்துக்களேதுமில்லை