நாரங்கல மலைப்பகுதியில் காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு!
பதுளை – நாரங்கல மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போது காணாமற்போயிருந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் முன்னெடுத்த தேடுதலின் போது இன்று மதியம் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளையை சேர்ந்த 22 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நண்பர்கள் 7 பேருடன் நேற்றிரவு அவர் நாரங்கல மலைக்கு சென்றுள்ளார்.
தங்கியிருந்த கூடாரத்தில் இருந்து நேற்றிரவு வௌியில் சென்றிருந்தவர் காணாமற்போனதாக நண்பர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை