அம்பிகைக்கு ஆதரவாக தமிழர்கள் குரல்கொடுக்க வேண்டும் – கமல்ஹாசன் கோரிக்கை!

ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் லண்டனில் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் அவர்கள்உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்

இன்றுடன் 16 நாட்களை கடந்துள்ளதால் அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சென்னையில் தங்கியிருக்கும் ஈழத் தமிழரான மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களையும் சந்தித்து அம்பிகையின் போராட்டம் குறித்த தகவல்களை வழங்கி ஆதரவினை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இன்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக தனது கருத்தை . அவரது பதிவில் தெரிவித்திருப்பதாவது.

தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பிப்ரவரி 27 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும். சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்.என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.