தன்னிடம் படிக்க வந்த 13 வயது சிறுவனை திருமணம் செய்துகொண்ட ஆசிரியை
தன்னிடம் படிக்க வந்த 13 வயது சிறுவனை ஆசிரியை ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் தற்பொழுது பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பஸ்தி பாவா கெல் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு 13 வயது சிறுவனை திருமணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட ஆசிரியைக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை.
திருமணத்திற்கான பேச்சுவார்த்தைகள் எடுக்கப்படும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடை வருவதனால் இவரது திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுமோ? என்ற அச்சம் இவரிடையே எழும்பியது.
இதனையடுத்து தனது குடும்பத்தாருடன் பூசகர் ஒருவரை சந்தித்துள்ளார் இந்த ஆசிரியை.
இதன்போது அந்த பெண்ணுக்கு தோஷம் இருப்பதாகவும் இதனால் தான் பல வருடங்களாக திருமணம் ஆகாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பூசகர்.
இதற்கு மாற்று வழியா ஒரு சிறுவனை பொம்மை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என பூசகர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தன்னிடம் படிக்க வரும் மாணவர்களில் ஒரு மாணவரை தெரிவு செய்து அவரை தனது வீட்டில் ஒரு வாரம் தங்கி படிக்குமாறு தெரிவித்துள்ளார் குறித்த பெண்.
இதற்கு அந்த மாணவனின் பெற்றோரும் சம்மதிக்க தனது வீட்டில் தங்கவைத்துள்ளார் ஆசிரியை.
மாணவன் ஒரு வாரம் கழித்து வீடு திரும்பிய பின்னரே தனது மகனை ஆசிரியை பொம்மை திருமணம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை