இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்
இந்தோனேசியாவில் மக்காசர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈஸ்டர் இடம்பெறவுள்ள நிலையில் தேவாலயத்திற்கு ஆராதனை நிகழ்வுகளுக்காக சென்றவர்களை குறிவைத்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் உடல் பாகங்கள் இருக்கும் நிலையில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் தாக்குதலுக்கு எந்தவித அமைப்பும் உரிமை கோரவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர், மோட்டார் சைக்கிளில் வந்து தேவாலயத்திற்குள் செல்ல முயன்றார் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை