இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு !

இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருந்து நடிகர் ரஜினிகாந்த்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கேவின் பெயரால் ஆண்டுதோறும் இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்த ஆளுமைகளுக்கு தாதா சாகேப் பால்கே விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்க்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “இந்திய சினிமாவில் முக்கிய பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். ரஜினிக்கு முன்னதாக இந்த விருது தமிழில் சிவாஜி கணேசன் மற்றும் இயக்குனர் பாலச்சந்தருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.