மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு ஆராதனை!

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களில்  இன்று ஞாயிற்றுக்கிழமை (04) இராணுவ மற்றும் காவற்துறையினர் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்பிரல் 21 ம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் கட்டிடவேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் மன்ரசா வீதியில்  சீயோன் தேவாலயம் புதிய கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றுது இதில் இறைவாசிகள் கலந்துகொண்டுடனர்.இதேவேளை மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இராணுவத்தினர் கடற்படையினர், காவற்துறையினர் புலனாய்வு பிரிவினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றுள்ளதுடன் பல பிராதான வீதிகளில் இராணுவத்தினர் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றதுடன் காவற்துறையினர் இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG 1295 1

IMG 1295
IMG 1305
IMG 1266

 

IMG 1289

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.