சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம்- 2021 மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி : பயர் ஹீரோஸ் சம்பியனானது !!

[நூருல் ஹுதா உமர்]

அமரர் சிவானந்தம் தர்மிகனின் ஞாபகார்த்தமாக “2011 உயர்தர மாணவர் ஒன்றியம்” மற்றும் “காரைதீவு டைனமிக் விளையாட்டுக்கழகத்தின்” இணை ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் விமர்சையாக நடைபெற்று வந்த சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம்- 2021 மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதி  நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (04)  மாலை காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியின் நடப்பாண்டுக்கான வெற்றியாளர்களாக பயர் ஹீரோஸ் அணியினர் தெரிவானார். இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிரில், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து வெற்றிக்கோப்பைகளை வழங்கி பாராட்டி கௌரவித்தனர். அத்துடன் பல கலை நிகழ்வுகளும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.