தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஜய் சைக்கிளில் வந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல அரசியல், சினிமா பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளிலேயே சென்ற நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குத்தி காட்டும் விதமாக விஜய் சைக்கிளில் வந்துள்ளதாக பேசி வரும் நெட்டிசன்ஸ் #PetrolDieselPriceHike என்ற ஹேஷ்டேகையும் விஜய் புகைப்படத்தோடு ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். மேலும் விஜய் ஓட்டு வந்த சைக்கிளின் நிறம் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்தது குறித்தும் பல்வேறு குறியீட்டு பேச்சுகள் எழுந்துள்ளன
கருத்துக்களேதுமில்லை