தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக்  தனது 59 ஆவது வயதில், இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார்.

சென்னை- சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக விவேக், வடபழனியிலுள்ள சிம்ஸ் தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்  சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணியளவில், உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள் என நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து, மக்கள் உள்ளங்களில் நீங்காத இடத்தை பிடித்த ஒருவராவார்.

இதேவேளை சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக சேவைகளிலும் விவேக், ஆர்வமாக பங்கேற்றுள்ளதுடன் பத்மஸ்ரீ விருதினையும் பெற்றுள்ளார்.

இவரது இறுதி கிரியை தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.