35 ஆண்டுகள் கழித்து தன் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ஹெலிகாப்டரில் வரவேற்பு ..
35 ஆண்டுகள் கழித்து தன் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ஹெலிகாப்டரில் வரவேற்பு அளித்துள்ள சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாக்பூரில் ஒரு குடும்பத்தில் நீண்ட காலம் கழித்து அதாவது 35 ஆண்டுகள் கழித்து ஒருபெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் அக்குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைக் கொண்டாடு விதமாக அக்குழந்தையின் தாய் வழி தாத்தா
மற்றும் பாட்டி இருவரும் அக்குழந்தையை வரவேற்கும் வகையில் ஒரு ஹெலிகாப்டரை சுமார் 4.5 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை