அசாமில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்
அசாமில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை தொடர்ந்து 4.1 முதல் 4.4 ரிக்டர் வரையிலான அளவிலான மூன்று நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டன.
இந்தியாவின் பல வடகிழக்கு பகுதிகளிலும், அண்டை நாடான பூட்டானிலும் சக்திவாய்ந்த் நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
அசாம் மாநிலம் சோனித்பூர் அருகே மையமாக கொண்டு 17 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர அளவு கோளில் 6.4 என பதிவாகி உள்ளது.முதல்நில நடுக்கம் காலை 7:51 மணிக்கு பதிவாகியுள்ளது மற்றும் நில அதிர்வு மையத்தின் தகவ் படி இது அசாமில் தேஸ்பூருக்கு மேற்கே 43 கி.மீ தொலைவில் மையமாக இருந்தது.
சக்திவாந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 4.1 முதல் 4.4 வரையிலான அளவிலான மூன்று நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டன. ஒன்று காலை 7.58 மணிக்கு, மற்றொரு காலை 8.01 மணிக்கு ஏற்பட்டது.
பூகம்பத்தின் மையமாக இருந்த சோனித்பூரில் ஒரு சாலையில் பெரிய விரிசல் உருவாக்கியுள்ளது.
இந்த நில நடுக்கம் வட வங்காளத்திலும் உணரப்பட்டது.தேஸ்பூருக்கு அருகே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.தேஸ்பூரின் மேற்கு தென்மேற்கில் சுமார் 30 கி.மீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையமாக அமைந்தது.
அசாமின் தலைநகரமான கவுகாத்தியிலிருந்து வடக்கே 140 கி.மீ (86 மைல்) தொலைவில் உள்ள தெக்கியாஜுலி நகரத்திற்கு அருகே இந்த நிலநடுக்கம் 34 கி.மீ (21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) நிலநடுக்க அளவை 6.2 ரிக்டராக ஆக உள்ளது என கூறியது.
அசாமில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் குறித்து அம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால்
கூறியதாவது:-
அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அனைவரின் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன், அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிலைமைகளை கண்காணித்து வருகிறோம் என கூறினார்.
அசாம் மாநிலத்தின் மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவாலுடன் பிரதமர் டெலிபோனில் பேசினார். மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.அசாம் மக்களின் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.
அதுபோல் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவாலுடன் பேசினார். பூகம்பத்திற்குப் பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலைமைய மதிப்பீடு செய்ய கேட்டு கொணடார்.நமது சகோதரிகள் மற்றும் அசாமின் சகோதரர்களுடன் மத்திய அரசு உறுதியாக நிற்கிறது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என கூறி உள்ளார்.
கருத்துக்களேதுமில்லை