கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் பள்ளி வாயல்களுக்கான அவசர அறிவித்தல்…

முஸ்லிம் பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம் . அஷ்ரபினால் பள்ளிவாசல்கள் நிர்வாக சபையினருக்கு கோரோனோ தொற்றை அடிப்படையாக கொண்டு ஒரு அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் சகல பள்ளிவாயல்களிலும் தராவீஹ், ஜூம்ஆத் தொழுகை மற்றும் பயான்கள், கியாமுல்லைல், இஃதிகாப் , தவ்பா போன்ற அனைத்து கூட்டுச் செயற்பாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தல், எந்தவொரு பள்ளியிலும் ஒரு நேரத்தில் அதி கூடியது 25 பேர் என்ற உச்ச வரம்புக்குட்பட்டு ஐவேளை ஜமாஅத் தொழுகைக்கு அனுமதி வழங்கல், முகமறைப்பு ( Mask ) அணிதல், ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணல் , தொழுகை விரிப்பை கொண்டு வருதல், வீட்டிலிருந்து வுழு செய்து கொண்டு வருதல் ஆகியன கட்டாயமாகும் .

வுழூ செய்யும் பகுதியை மூடிவைத்தல், தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட சகல பகுதிகளிலும் அனைத்து பள்ளிவாயல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் .சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து வழிகாட்டல்களும் வக்பு சபையின் முன்னைய பணிப்புரைகளும் மிகக் கண்டிப்பாகப் பின்பற்றப்படல் வேண்டும். மேலுள்ள வழிகாட்டல்களை பின்பற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது அல்லது சிரமம் எனில் பள்ளிவாயல்களை மூடுவதற்கு நம்பிக்கையாளர்களுக்கு பொறுப்பாளார்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது என்று அறிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.