சர்வதேச போட்டிகளில் இருந்து திசர பெரேரா ஓய்வு
அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாக இலங்கை அணி வீரர் திசர பெரேரா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
32 வயதான அவர், இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும் 166 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
கருத்துக்களேதுமில்லை