“எமது பிரதேச இன ஐக்கியத்தை சீர்குலைக்க முயற்சிகளை எடுக்கும் சக்திகளை ஒன்றினைந்து தோற்கடிப்போம்”…
அண்மைய நாட்களில் எமது கல்முனை மாநகரத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயற்றுதல் சம்பந்தமாக பாராளுமன்றத்திலும், சமூக வலைத்தலங்கிலும் பேசப்படும் விடயம் சம்பந்தமாக முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்
தனது அறிக்கையில் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
எமது கல்முனை மாநகரத்தில் முஸ்லீம் தமிழ் சிங்கள மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் இவ்வேளையில் அதனை சீர் குலைப்பதற்காக கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயற்றுதல் என்ற விடயத்தை பூதாகரமாக மாற்றி அதில் தங்களது சுய நல அரசியலை இதற்குள் விதைக்க சிலர் முனைகின்றனர் இதற்கு எமது மாநகர மக்கள் ஒரு போதும் துணை போகிவிட வேண்டாம் என பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன்.
இது விடயமாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் மேலும் குறிப்பிடுகையில்.
எமது கல்முனை மாநகரத்தில் 70% முஸ்லீம்களும், 30% தமிழர்களும் ஒரு குறிப்பிட சில சிங்கள குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர் இங்கு பெரும்பான்மையாக முஸ்லீம் சமூகமே வாழ்ந்து வருவதும் இங்கு குறிப்பிட்டு நோக்கத்தக்கதாகும்.
கடந்தகாலத்தில் கல்முனை பிரதேசம் கல்முனை பட்டினசபை என்று தற்போதுள்ள கல்முனை நகர்பகுதியுடன் கல்முனைக்குடியும், கல்முனை தெற்கு கிராமோதய சபையென்று சாய்ந்தமருது பகுதியும், கல்முனை மேற்கு கிராமோதய சபையென்றும், நற்பட்டிமுனை, சேனைக்குடியிருப்பு பகுதிகளும், கல்முனை வடக்கு கிராமோதய சபையென்று பாண்டிருப்பு,மருதமுனை, நீலாவனை போன்ற இடங்கங்களை உள்டக்கிய நான்கு சபைகள் காணப்பட்டன அவற்றுக்கான எல்லைகளும் வகுப்பட்டிருந்தன பின்னர் 1987ல் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கந்தில் ஒரு திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு பிரிந்திருந்தவற்றை ஒன்றாக்கி பிரதேச சபைகள், நகரசபைகள் சட்டம் கொண்டுவரப்பட்ட போதுதான் கல்முனை மாநகரம் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது இந்த மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழந்து தங்களுக்கிடையில் எந்த பிரிவினையையும் கேட்கவுமில்லை அவரவர் உரிமைகளை மதித்து விட்டுக்கொடுப்புடன் வாழ்ந்து வந்தனர்.
இன்று இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கிய கொடிய யுத்தம் தோற்றம் பெற்றதோ அன்றிலிருந்துதான் இந்த இன முரண்பாடு தோற்றம் பெற்றது.
யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு இப்பொழுது ஓரளவுக்கேனும் எமது சமூகங்கள் எமது பிரதேசங்களில் வேற்றுமைகளை மறந்து மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் அதனைக் குழைப்பதற்கு சில தீய சக்திகள் முயன்று கொண்டிருப்பதைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாகவுள்ளது.
எமது கிழக்கு மாகாணத்தில் பெரிய நகரங்களைப் பொருத்தமட்டில் தமிழ் மக்களுக்கு மட்டக்களப்பு எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றதோ அது போலவே கல்முனை முஸ்லீம்களின் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்குகின்றது என்பது எவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமாகக் காணப்படுகின்றது. இதனை அறிந்தும் அறியாமல் உள்ள சில தீய சக்திகள் இவற்றில் குழப்பங்களை உண்டு பண்ணி குளிர்காய முற்படுகின்றனர் இதனை வெளிப்படுத்தக்கூடிய விடயம்தான் அண்மையில் பாராளுமன்றத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் உரையாகும்.
என்னைப் பொருந்த மட்டில் இந்த உரை நியாதாதிக்கம் அற்றதும் எமதுசமூகத்துக்கு மனக்கஸ்டத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருந்தது. ஏனெனில் அவரது உரை கல்முனை தமிழ் மக்கள் தங்களது நிலங்களை தாங்கள் ஆழ விரும்புகிறார்கள் அதற்கு முஸ்லீம்கள் தடையாக இருக்கக்கூடாது எல்லைப்பிரச்சினைகள் இருந்தால் அவற்றினை பேசித்தீர்த்துக் கொள்வோம் என்று அறைகூவல் விடுத்திருந்தால் அதனை எல்லோரும் பாராட்டியிருப்போம் அதனை விடுத்து அம்பாறை மாவட்ட மக்களின் அதிகூடிய வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வசை பாடியதுமட்டுமல்லாது கல்முனைRDHS, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை என்பனவற்றை முஸ்லீம்கள் பிரித்து வைத்துள்ளீர்கள் எங்களது உப பிரதேச செயலகத்தை தரமுயர்துவதை மாத்திரம் தடுக்கின்ரீர்கள் என்ற கருத்துப்பட கூறியிருப்பது உண்மையிலேயே வருந்ததக்கதாகும்.
இங்கு குறிப்பிடப்படுகின்ற இரண்டு ஸ்தாபனங்களும் எவ்வாறான சந்தர்ப்பத்தில் எமது மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரபினால் கொண்டுவரப்பட்டது என்பதை அறிந்து கொள்ளாமல் எமது சமூகத்தின் மீது குற்றம் சுமத்துவது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும் தாங்கள் குறிப்பிடும் RDHS காரியாலயம் கல்முனை பிராந்தியத்திலுள்ள அனைத்து இன மக்களுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறது மட்டுமல்லாமல் இதன் பணிப்பாளர்களாக மாறி மாறி எமது இரு இனத்தவர்களுமே கடமை புரிந்து வருகின்றனர் அதே போன்றுதான் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையும் யுத்த சூழ்நிலையினால் கல்முனைக்குச் செல்ல முஸ்லீம்கள் மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் அச்சப்பட்ட சூழ்நிலையில் மறைந்த தலைவரினால் இவ்வைத்தியசாலை தோற்றுவிக்கப்பட்டது இன்று எல்லா இன மக்களுக்கும் தனது சேவையினை வழங்கிக் கொண்டிருக்கின்றது அந்தவகையில் எந்த இனத்தவராக இருந்தாலும் இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
நான் இந்த மாநகரத்தின் மேயராக பதவியேற்ற பொழுது எமது தேசியத் தலைவர் அல்- ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களும்,எமது பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களும் என்னிடம் கூறிய விடயம் நீங்கள் ஒரு இளம் முதல்வராக உள்ளீர்கள் உங்களது காலத்தில் இன,மத,பிரதேச வேறுபாடின்றி சேவை செய்து இன ஐக்கியத்தை இந்த கல்முனையில் ஏற்படுத்த வேண்டும் என கூட்டாக வேண்டிக் கொண்டார்கள்.
அந்த காலப்பகுதியில் கல்முனை மாநகர மக்களுக்கு எந்த விடயமாக இருந்தாலும் எவ்வித பாகுபாடின்றி தன்னாலான அனைத்து சேவைகளையும் செய்து காட்டினோம் இதனால் தான் இன்றும் எமது மாநகரத்தின் எல்லா இன மக்களாலும் விரும்ப்ப்பட்ட ஓரு முதல்வராக இருந்து வந்துள்ளேன் என்பதனை இக்காலப்பகுதியில் என்னோடு இருந்த கல்முனை மாநகரசபை த.தே. கூட்டமை்பு உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிர்கட்சியிலுள்ள அத்தனை கட்சிகளின் உறுப்பினர்களும் சாட்சிபகருவார்கள் ஆகவே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே நீங்களும் ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினர் எவ்வகையான பிரச்சினைகளாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வினைக்கானலாம் சிறுபான்மை சமூகமான நாங்கள் இரண்டு சமூகங்களும் எமக்குள் முட்டி மோதி பிரிவினையை வழக்காமல் எமது எதிர்கால சந்ததி இந்த பிரதேசத்தில் நிம்மதியாக வாழ்வதற்காக எமது இரு சமூகத்திலுமுள்ள எல்லாமட்டத்திலுமுள்ள பிரதிநிதிகளை அழைத்து இப்பிரச்சினைக்கொரு நிலையான நிரந்தரமான ஒரு தீர்வினைக்கான நாம் அனைவரும் ஒன்றினைந்து உழைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.
கருத்துக்களேதுமில்லை