100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – இருவர் பலத்த காயம்

(க.கிஷாந்தன்)

நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை சூரியகந்தை பகுதியில் 18.05.2021 அன்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அக்கரைப்பற்று பகுதியிலிருந்து அட்டன் பகுதிக்கு சென்ற கார் ஒன்று நுவரெலியா – வலப்பனை பிரதான வீதியிலிருந்து வீதியை விட்டு விலகி குறித்த கார் சுமார் 100 பள்ளத்தில் உள்ள  நுவரெலியா இராகலை பிரதான வீதிக்கு  பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி காரில் இரண்டு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் இருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக இராகலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.