தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார் ;இந்தியாவில் சம்பவம்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியவர்களை போலீஸார் தோப்புக்கரணம் போட வைத்தது வைரலாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த வாரம் முதலாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அவசர தேவைகள் தவிர்த்து மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் பலர் சாவகாசமாக வீதிகளில் சுற்றி வருவதும் தொடர்கிறது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் போலீஸார் வாகனங்களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆரணியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு நூதன தண்டனையை போலீஸார் அளித்துள்ளனர். ஆரணி சாலைகளில் விதிமுறைகளை மீறி சுற்றிய நபர்களை பிடித்து தோப்புக்கரணம் போட சொல்லி தண்டனை அளித்துள்ளனர். பின்னர் எச்சரித்து அவர்களை அனுப்பியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை