“கலப்பின அரிசியின் தந்தை” யான யுவான் லாங்பிங் காலமானார்
“கலப்பின அரிசியின் தந்தை” யான யுவான் லாங்பிங் காலமானார் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இறக்கும்போது அவருகு்கு வயது 91 ஆகும்.
அவரது மறைவுக்கு இலங்கையிலு சீன தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
அந்த இரங்கல் செய்தியில்,
“யுவானின் கடின உழைப்பு காரணமாக, சீனாவின் மொத்த அரிசி உற்பத்தி 1950இல் 56.9 மில்லியன் தொன்னிலிருந்து 2017.ல் 194.7 மில்லியன் தொன்னாக உயர்ந்தது. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 300 பில்லியன் கிலோ அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வருடாந்த அதிகரிப்பு 60 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவளிக்க போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை