கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு!
நாட்டில் நேற்றையதினம் (21)பதிவான 3,547 கொரோனா தொற்றாளர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 800 பேர் அடையாளம் காணப்பட்டுனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுள் 74பேர் பிலியந்தலை பகுதியிலும், 73 பேர் நாரஹென்பிட்டி பகுதியிலும் அதிகளவானே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கம்பாஹா மாவட்டத்தில் 617 பேரும், குருநாகலை மாவட்டத்தில் 297 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை