நாட்டின் மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என சீன நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்!..
நாட்டின் மொழி கொள்கையை பின்பற்றுமாறு கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் இது கவலைக்குரிய விடயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆங்கிலம், சீன மற்றும் சிங்களத்துடன் அடையாளப்படுத்தப்பட்ட பெயர் பலகைகள் காரணமாக கொழும்பு துறைமுக நகர நிறுவனம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
கொழும்பு துறைமுக நகரம் கட்டுமானத்தில் உள்ளது என்றும் தள ஊழியர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களின் நலனுக்காக அடையாள பெயர் பலகைகளும் ஒப்பந்தக்காரரால் அமைக்கப்பட்டன என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், இந்த நாட்டின் மொழி கொள்கையுடன் கட்டாயம் கொழும்பு துறைமுக நகர நிறுவனம் இணக்கம் இருக்க வேண்டும் என கூறினார்.
கருத்துக்களேதுமில்லை